Tuesday, September 22, 2009



என் அறையின் கடிகார  சத்தம்

இருளுடனான

பெரும் நிசப்த்தங்களின்போது

நான் விரும்பிக்கேட்பதில்லை

என் அறையின் கடிகார சத்தத்தை.

Monday, September 21, 2009

பாலைவனத்தில் விழுந்தன

ஆப்பிள் விதைகள்

வெறும் குப்பையாக
புரிந்துகொள்ள முடியாமையிலும்

புரிந்துகொள்ள முயற்சித்தலிலுமே

கழிகிறது வாழ்க்கை 

Sunday, September 13, 2009

Saturday, September 12, 2009

Friday, September 11, 2009


இரவின் நீளம்

துயரங்களின்போது
மிக நீண்டதாகிறது இரவு.

பரபரத்த பகல்வேளையின்
வடிகால்களில்
வெளியேறியிருந்த துக்கத்தை
நம்முள்
முழுவதுமாய் நிரப்புகிறது
இரவு.

"அல்ப்ரோசொலம்" உட்கொண்டும்
உறக்கமில்லாமல்
காலையில் சோர்ந்து விழுபவர்களிடம்
கேட்டுபாருங்கள்
இரவும்
இரவின் நீளமும்
எவ்வளவு கொடுமையானதென்று.

Thursday, September 10, 2009